இறையனாரே மறைந்தீரா? மறைந்தீர் என்னும்
இச்செய்தி, பொய்யாகிப் போய் விடாதா?
இறுதியாய் நேற்றும்மைப் பார்த்த போது,
எள்ளளவும் அய்யமின்றித் திரும்பி னேனே
உறுதியாய் உயிர்பிழைத்துக் கொள்வீர் என்றே,
உண்மையாய் நம்பினேனே, ஏமாந் தேனே.
மறுகணமே மறைந்தீரே, என்ன மாயம் ?
மடாரெனக் கொத்தியதோ, மரணப் பாம்பு.
கண்திறந்து பார்த்தீரே, வாய் திறக்கக்
கடு முயற்சி செய்தீரே, அசைந்த சைந்து
பண் திறந்து பாடுகின்ற உங்கள் வாயால்
பாசத்தைத் தந்தொருசொல் சொல்வீர் என்றே
பாவி நான் எதிர்பார்த்தேன். திறந்தீர் இல்லை.
அண்ணனோ நம் வீரமணி ஊரில் இல்லை
அவர் கண்ணீர் மழையினிலே நனைந் திருப்பார்
கருஞ் சட்டைக் காவலரே, பெரியார் கையின்
கைத்தடியாய், அவர்கையின் சுடராய், நீங்கள்
பெரு முழக்கம், கொள்கைகளின் விளக்கம் செய்த
பேருரை யாளர் அன்றோ?, இனிமேல் அந்த
உரைமுழக்கம் கேட்பதெங்கே? அடடா, அந்த
உச்சரிப்பை, ஒலி நயத்தைக் காண்ப தெங்கே?.
ஒருதிங்கள் முடியவில்லை. விழாக் கண் டீரே,
உறங்கி விட்டீர் சாவினைப்போல் கொடியோன் இல்லை.
புலவர் இளஞ்செழியன், எம்.ஏ,
No comments:
Post a Comment