தன்மானம் மேலிட்டுத் தன்னுணர்வு பீரிட்டர்ல்,
பின் என்ன? இனமானம் தானே வரும்?
பரம்பரைப் பாவலன் நான் அல்லன் நெருக்கடியால்
பட்டுக்கொண் டாலெழுதும் பஞ்சத்துக் கவிஞன்
பெர்லினில் நிகழ்ந்த பன்னாட்டுத் தமிழர்
பெருமா நாட்டில் மேத்தா வராமையால்
பாட்டரங் கின்திடீர்த் தலைமை யேற்கப்
போட்டார் வாமுசே என்னை, அத்தகு
மாற்றுநிலைக் கவிஞன் ஆனநான் இத்தகு
ஏற்றமிகுந் தோரிடை அமர்த்தப் பட்டேன்
எனவே-
அடிக்கடி பாடா நெருக்கடிக் கவிசொல்
மடுக்கும் கட்டாயம் நேர்ந்ததே உமக்கு!
ஏதோ கேட்டுவைப் பீரே! எப்போது
போதுமென் றுணர்கின் றீரோ அப்போது
கைதட்ட வேண்டாம்; கணைக்கவோ வேண்டாம்
மெய்யினை மட்டும் நெளித்துக் காட்டும்;
நிறுத்தி விடுவேன் பாட்டை; என்னை
உறுதியாய் நம்புக ஒரேயொரு வேண்டல்,
உடனே உடம்பை நெளித்து விடாதீர்;
கடனைச் சிறிதே செய்யவிடு வீரே;
புரட்சிக் கவிஞர் குமுகாயக் கவிஞர்;
முரட்டுக் கவிஞரே! திருட்டுப் பார்ப்பனர்
கொடுமைகள் கண்டு குமுறிய பெரியார்
எடுத்த நிலைகள் எல்லா வற்றையும்
இலக்கிய மாக்கி எதிரி இனத்தை
உலுக்கி யெடுத்த ஒருதனிப் புலவரவர்
‘என்னெத்தெ‘க்‘ கண்ணை யாக்க ளாகச் சின்னப் பிறவிகள் ஆரிய மாக்கள்
தாசி மக்களாய் புறமுது கிட்டோராய்க்
கூசாது நம்மைக் கொச்சைப் படுத்தினர்
என்பது பற்றி எதிர்க்காத தமிழரை
என்பு வலிக்கப் பாட்டால் புடைத்து
உசுப்பி இயக்கிய இனமானக் கவிஞர்
பொசுக்கும் சொற்களால் புகன்ற ஞாயங்கள்
தேர்ந்தே ஓர்ந்தே ஓதியுள் தேக்கியே
பார்கேட்க உண்மையைப் பறைசாற்று வோமே!
இனப்பெயர் என்என்று பிறர்என்னைக் கேட்டால்
மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்
நான்தான் திராவிடன் என்று நவில்கையால்
தேன்தான் நாவெல்லாம் வான்தான் என்புகழ்!
ஆரியர் மிலேச்சர் ஆதலால் ஆயெத்து
வேரினர் பார்ப்பனர் வேறி னத்தவர்!
திராவிடர் நாங்கள் - இத்
திராவிட நாடெங்கள் செல்வப் பெருக்கம்
ஒரே இனத்தார்கள் - எமக் (கு)
(ஒ)கொன்றே கலைபண்பு ஒழுக்கமும் ஒன்றே
இவ்வண்ண மெல்லாம் ஆர்ப்பரித்தா டினார்
இனமானக் கவிஞர் எத்தனையோ பாடினார்!
ஆரிய இனமே ஒட்டு மொத்தமாகி
திராவிட இனத்தையே ஓட்ட மொத்தமாய்
இழித்தே சாத்திரம் எழுதி வைத்தார்
பழிநானா வஞ்சகர் சட்டமும் செய்தார்.
கூரிய பெரியார் இனமானம் ஊட்ட
சீறிப் பிளிறினார் புரட்சிக் கவிஞர்
எடுத்துக் காட்டாய் அவர்தம் வரியால்
படித்துக் காட்டுவேன் கடமை உந்த;
“வடக்கினில் தமிழர் வாழ்வை
வதக்கிப்பின் தெற்கில் வந்தே
இடக்கினைச் செயநி னைத்த
எதிரியை .........
“ஆரியர் இங்கு சீரிய தமிழில்
அறிவு பெற்றனர் அதிகா ரத்தின்
விருப்பால் நாள்தொறும் விளைத்தனர்” சூழ்ச்சிகள்,
முதலிடைக் கடைச் சங்கத் தின்பின்
மதத்துறை யாளரின் மடுத்துறை யாக
ஆனது திராவிடம்; போனது மானம்
ஈனப் பார்ப்பனர் எடுப்பார்க்கைப் பிள்ளையாய்
எல்லா அரசரும் இடுப்பொ டிந்தனர் !
“பெரிது மானம் உயிர்பெரி தில்லை
பெற்ற தாயைப் பிறர்ஆள விடுவோன்
திராவிடன் அல்லன், திராவிடன் அல்லன்
ஆரோ ஆரிரரோ!
எந்தஇன மக்களுக்கும் கிட்டாத செல்வம்
இலெமூரிய இனத்தவர்க்கே வந்துவாய்ந்த செம்மல்!
வந்தவர்கள் வஞ்சகர்கள் வலக்கர மாக
வண்டமிழர் நாகரிகம் குழைத்த பெருங்கொடுமை
முந்தையநம் சான்றோர்கள் மேவியநற் புகழை
முடித்துவிடக் கட்டவிழ்த்த கதைகளெலாம் ஆய்ந்த
செந்தமிழர் மாவுடைமைப் புரட்சிப்பா வலரோ
செம்மாந்தே இனமான முகடேறி நின்றார்;
“தென்திசையைப் பார்க்கின்றேன் என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!
அன்றந்த லங்கையினை ஆண்டமறத் தமிழன்!
அய்யிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை என்தமிழர் பெருமான்!
இராவணன்தான் அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!
பகவத் கீதை பகர்ந்த கண்ணனை
வடமது ரைக்கே அச்சென நவில்வர்
திருக்குறள் அருளிய திருவள் ளுவரோ
தென்மது ரைக்கே அச்சென செப்புவர்
இதனால் அறிவ தென்ன வென்றால்
இருவேறு நூற்கள் இருவேறு கொள்கைகள்,
இருவேறு மொழிகள் இருவேறு பண்பாடு,
உளவென உணர்தல் வேண்டு மன்றோ?“
பண்பாட்டு வேற்றுமையைப் பாரதி தாசனார்
பண்ணாய் இப்படி முரண்நிலை காட்டினார்
அவையோர் இங்கொரு சுவையான செய்தி
சிவசங் கரிநம் தமிழர் தலைவராம்
வீரமணி யாரிடம் நேர்காணல் செய்கையால்
காரமாய் ஓர்வினா திமிருடன் கேட்டார்.
“தமிழ்ப்பண் பாடு தமிழ்ப்பண் பாடென
உமிழ்வதன் பொருள் விளக்கு வீர்களா?“
தடையோ தயக்கமோ சற்று மிலாமல்
விடைஏவு கணையாய் விரைந்து பாய்ந்தது!
“பெற்ற தாயையே அவள், இவள் என்பதைக்
குற்றமாய்க் கருதுதல் தமிழ்ப்பண் பாடு! “
உளத்தால் தீய்ந்த பார்ப்பனி பெரியார்க்
களத்தி லிருந்தே காணாமற் போனார்
இனக்கண் பேணும் இணையென வாழ்த்த
இனமானப் போராளிக் குற்றபயிற் றுநராம்
ஒருவரியில் இருபொருள் உணர்த்தினார் கவிஞர்,
“ஒருமகளை அய்வர் உவக்கும் வடக்கர்,“
எப்படி இவர்தம் இலக்கண வகுப்பு?
முப்படித் தேனாய்ச் சுவைக்கிற தன்றோ?
இனமானப் பண்பு என்னவெலாம் செய்யும்?
மனமார நம்மவர் எவரும் நானிலம்
போற்று தற்குரிய ஏற்றம் படைத்த
ஆற்றல் காட்டினால், கொள்கை எண்ணாமல்
கட்சிபா ராது வலியச்சென் றவரை
உச்சிமீ தமர்த்தி உருமிக் கூத்தாடும்
புரிநூல் கும்பல் எரிந்து விழுகையில்
வரிந்து நமர்க்கு பரிந்து வழக்கிடும்
மோவாய் தடவி ஆங்கிலர் விழிக்க
நாவாய் ஓட்டிய தமிழர் சிதம்பரம்
பாரே வியந்த பச்சைத் தமிழர்
பேராயப் பெருந்தலை காமராசர்
ஊரெலாம் புகழ்ந்த விசுவநாத தாசர்
அனைத்து நாட்டுப் பேரவை யோரைப்
பிணைத்துப் போட்ட ஆர்க்காட்டு ராமர்
கசுமல இந்தியைக் கடுமையாய் எதிர்த்த
பசுமலைத் தமிழர் நாவலர் பாரதி
கலைத்துறை போகிய தண்டபாணி தேசிகர்
கலைவாணர் கிருட்டிணன், தமிழ்த்துறை வல்லோர்
சந்திரசேகரர் தென்றல் திரு.வி.க
கந்தையா, மயிலைசீனி வேங்கடசாமி
வெள்ளை வாரணர் விபுலாநந்தர்
கள்ளமில் பாவாணர் பண்டா ரத்தார்
எண்ணவே இனித்திடும் பேரறி வுக்கனி
அண்ணல் அம்பேத்கர் எனநம் மவரை
நன்றே ஏற்றிப் போற்றிப் பாடினார்
அன்றே இனமானப் புரட்சி கவிஞர்,
தமிழினத்தின் சீரழிக்கு தருக்கர் தமை
தண்டியாமல் இருப்போ மானால்
இமியளவும் தன்மானம் இனமானம் பேணாமல்
இளிப்போ ராக
தமிழ் மறுக்கத் துப்பில்லாப் பதர்களாக நமைஎண்ணிக்
கயமைப் பார்ப்போர்
தமிழர்வர லாறழிப்பார் எனுமுண்மை தெளிந்தவராம்
கனகர் செல்வர்,
“எங்களுடைக் கோவிலிலே எங்களுடை மொழியால்தான்
ஓதல் வேண்டும்
இங்ஙனம் குன் றக்குடியார் கிளர்ந்தெழுந்தே
ஈரோட்டார் மொழியில் பேச
எங்களவா ஒப்பாறென் றாணவத்தால் காஞ்சிமடம்
வெறுப்பை வீச
செங்குருதி கொதிப்பேற இனமானப் பாவலரும்
எடுத்தார் தூவல்
“தமிழ்தந்த சிவனார்க்கு வடமொழியால் பரிந்துரையா
சாற்றா யென்று
தமிழறிகுன் றக்குடியான் ஒருசொல்லால் ஒருசாட்டை
தருதல் கேட்டு
சிமிட்டாவைத் தூக்கியே சங்கரரும்
ஓடிவந்தார் சிரைப்பதற்கே
அமைவாகப் பார்ப்பனரும் அடப்பத்தைத் தாங்கினார்“
எனப் பாய்ந் தாரே!
தமிழா! நமக்கின மானம் இலையேல்
அமிழ்ந்தே போவோம்; உளங்கொள்- உமிழ்ந்தே
வருங்காலம் நம்மை பழிக்கும் உலக
வரலாறே நம்மை வெறுக்கும்- கருத்தாகத்
திட்டமிட் டேநமைத் தீர்த்திட எண்ணிய
ஒட்டுண்ணி பற்றி அறிவாசான் இட்ட
இனமானப் பாடத்தை முற்றாக ஓதி
மனங்கொண்டால் தானாக ஊறும் - இனமானம்
இன்று நமக்கெல்லாம் இஃதொன் றல்லவா
இன்றி யமையா உயிர்ச்சத்து? தொன்றுதொட்டு
வாழும் தமிழர்க் குற்ற புகழின்று
ஈழப் பிரபா கரனாலே பாழும்
தமிழ்நாட்டுப் பார்ப்புத் தறுதலைகள் போடும்
திமிராட்டம் கண்டும் பொறுத்தால் அமிழ்ந்தோம்!
எனவே தமிழா! இனவுணர்வு கொண்டு
தினவை நடப்பினில் காட்டு! இனப்பகை
மாசோடு வாழும் மரங்கொத்தி மொட்டையரைச்
சோசோவென் றேகவனால் ஓட்டு!
No comments:
Post a Comment