வாழ்க்கைக் குறிப்புகள்

பெரியார் பேருரையாளர் அ. இறையன் வாழ்க்கைக் குறிப்புகள்


தாய் : இராமுத் தாய்       
தந்தை : அழகர் சாமி
இயற்பெயர் : கந்தசாமி
பிறந்த இடம் : மதுரை
பிறந்த நாள் : 04.06.1930
வளர்ந்தது : திண்டுக்கல்



படிப்பு :

  • அமெரிக்க கிறித்தவத் தொண்டறத்தின் (AMCC) தொடக்கப் பள்ளி, மதுரை
  • நகராட்சி உயர்நிலைப் பள்ளி, திண்டுக்கல்
  • பள்ளி இறுதித் தேர்வில் 1947-மார்ச் வெற்றி
  • ஆசிரியர் பயிற்சி - இடைநிலை திண்டுக்கல் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (1948) 
  • இசைப்பயிற்சி 8 ஆண்டுகள்


இயக்கத்திற்கு அறிமுகம்:
1948 ஈரோடு சிறப்பு மாநாடு டார்ப்பிடோ ஏ.பி.சனார்த்தனம்
அன்றைய இளம் முன்னோடிகள் கி.வீரமணி, மு.கருணாநிதி ஆகியோரிடம்

1948 திண்டுக்கல்:
திராவிட மாணவர் கழகம் அமைத்தல்

1949 திண்டுக்கல்:
அய்யா-அம்மா திருமண ஏற்பாட்டை வரவேற்று திண்டுக்கல்லில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்துதல்

1949 திண்டுக்கல்:
திராவிட இளைஞர் விளையாட்டுக் கழகம்
அமைத்தல் (YMDA)

1952 பறமக்குடி:
அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் அமர்த்தப் பெறுதல்
வழக்கறிஞர் இரா.சண்முகநாதன், காரைக்குடி என்.ஆர்.சாமி ஆகியோருடன் நட்பு



பள்ளி ஆய்வாளர்:
தேவகோட்டை, அருப்புக்கோட்டை, விருதுநகர், அம்மாபேட்டை, திருப்பூர், பல்லடம், குடிமங்கலம், சீர்காழி (தஞ்சை) முதலிய வட்டாரங்கள்

அரசுப் பள்ளிகளின் துணை ஆசிரியர்:
கீழக்கரை, பறமக்குடி, கோடைக்கானல், சேயூர், கோடம்பாக்கம்

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் பயிற்றுநர்:
திண்டுக்கல், குருக்கத்தி, மேலூர், அமராவதி புதூர்

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்:
பாடியநல்லூர், ஆண்டார்குப்பம், அன்னை சிவகாமிநகர்

பெற்ற கல்வித் தகுதிகள்:

  • பி.ஏ., பி.டி.
  • பெங்களூரில் Regional Institutes English  ஆங்கிலத்தில் சிறப்புப் பயிற்சி (10 மாதம்)


கல்வித் துறைப் பணிக் காலம்: 38 ஆண்டுகள்

இணை நல நாள்: 10.3.1959

இணையர்:
இலட்சுமி.
அய்யாவின் கொள்கைத் தத்துவங்களை ஏற்றுக் கொண்ட ஜாதி மறுப்புத் திருமணம். மதுரை முத்து அவர்களால் ஏற்பாடு செய்து எமகண்டத்தில் நடத்தி வைக்கப்பட்டது. (பின்னர் திருமகள் ஆகிவிட்டார்)

இறையனின் விழுதுகள்:
மகள்கள்: பண்பொளி, இறைவி, மாட்சி; மகன்: இசையின்பன் அனைவருக்கும் ஜாதி மறுப்புத் திருமணம்

விழுதுகளின் விழுதுகள்:
வீரமணி, வெற்றிமணி, புயல், சீர்த்தி, அழல், புகழ், இனநலம், அடல்

02.07.1970 சிவகங்கை:
தந்தை பெரியாருடன் முதல் பொதுக்கூட்ட மேடைப்பேச்சு

வடசேரி, வடார்க்காடு மாவட்டம்:
முதல் திராவிடர் கழக பயிற்சி முகாமில் பாடம் எடுத்தது

பணியாற்றிய கழகத்தின் அமைப்புகள்:

  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுத்தறிவு ஆசிரியர் பணி


கழகத்தில் பணி:

  • பயிற்சிப் பட்டறைச் செயலாளர்,
  • உதவிப் பொதுச் செயலாளர் (கலைத்துறை)
  • விடுதலை அயல்நாட்டுப் பதிப்பு (இணையதளம்) பொறுப்பாளர்
  • பெரியார் பகுத்தறிவு ஆய்வக நூலக இயக்குநர்
  • தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற அமைப்பாளர்
  • பாரளாவிய பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணித் தலைவர்.
  • புதுமை இலக்கியத் தென்றல் - மேடை ஒருங்கிணைப்பாளர்
  • பெரியார் பயிலக ஆங்கிலப் பேச்சு பயிற்றுநர்


பெரியார் பேருரையாளர் விருது:
திருச்சியில் 21.2.1982

பொழிவுகள்:

  • பெரியார் - ஒரு சமுதாய வழக்குரைஞர்
  • பெரியார்  - ஒரு நோய் முதல் நாடும் மருத்துவர்
  • பெரியார்  - ஒரு தேர்ந்த பொறியாளர்


எழுத்தாளராக யாத்த நூல்கள்:

  • சுயமரியாதைச் சுடரொளிகள்
  • இல்லாத இந்துமதம் 
  • ஜெயலலிதா பின்னாலா திராவிடர் கழகம் சென்றது? 
  • இதழாளர் பெரியார் 
  • மகாபாரத ஆராய்ச்சி - ஒருபகுதி
  • பெரியார் ஆயிரம் - ஒரு பகுதி


திராவிட இயக்க இதழ்களில் எழுத்துப்பணி:
விடுதலை ஞாயிறு மலர் (திங்கள்  ஒன்றுக்கு ஆசிரியர்),

புனை பெயர்களில் கட்டுரைகள்:
இறையன், இனநலம், தமிழாளன், பொருநன், பெரியார் மாணாக்கன், மாந்தன், பாணன், வேட்கோவன், சான்றோன், அறிவேந்தி, கிழவன், வழக்காடி, பிடாரன், சுவைஞன், சீர்தூக்கி, பூட்கையன், செய்தி வள்ளுவன், கண்டுவந்தோன்

மறைவு : 12.8.2005 ஆம் நாள் இரவு 9 மணியளவில்
பெரியார் திடல், சென்னை - 7




சற்று விரிவான வாழ்க்கைக் குறிப்புகள்:  இசைபட வாழ்ந்த இறையனார்